ஆயிரம் மடங்கு வேகத்தில் இன்டர்நெட்

Go to fullsize image                     கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முதல் இடம் பெற்றுப் பெயர் பெற்றது அமெரிக்காவில் இயங்கும் எம்.ஐ.டி. கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம். இங்குள்ள ஆய்வாளர்கள் அண்மையில் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இன்டர்நெட் செயல்படும் வேகத்தினை 100 முதல் 1,000 மடங்கு வரை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான வழி முறை, இன்டர்நெட் போக்குவரத்தினைக் கையாளும் ரௌட்டர்களில் தான் ஏற்படுத்தப்படும் என்று இந்த ஆய்வை வழி நடத்தும் வின்சென்ட் சான் கூறியுள்ளார். ரௌட்டர்களில் உள்ளே அமையும் மின் அலைகளை, அதிவேக ஆப்டிகல் அலைகளாக மாற்றினால் இந்த வேகம் கிடைக்கும் என்று சொல்கிறார்.100 மடங்கு வேகத்தில் செயல்படுகையில், தற்போது 100 எம்பி பைல் அனுப்பும் நேரத்தில், 10 ஜிபி பைல் ஒன்றை அனுப்ப முடியும்.

Live TV

Sun Tv Live Streaming KTV Live STreaming Vijay Tv Live Streaming Kalaignar Tv Live Streaming Raj News Live Streaming