கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.


 கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.


மென்பொருளின் பெயர் பிலிங். இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். 


விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது. மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. 


கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.


Download Here...

0 கருத்துரைகள்:

Live TV

Sun Tv Live Streaming KTV Live STreaming Vijay Tv Live Streaming Kalaignar Tv Live Streaming Raj News Live Streaming