பயன்படுத்தி பாருங்கள்

Portable Apps

மென்பொருள்களில் Portable Software என பல இடங்களில் நாம் கேள்விப்பட்டதுண்டு . ஒரு மென்பொருளை நாம் கணிணியில் பயன்படுத்த வேண்டும் என்றால் முதலில் அந்த மென்பொருளை நாம் நிறுவ அதாவது Install செய்ய வேண்டும் .இதற்க்கு அந்த மென்பொருள் வடிவமைத்தவர்கள் தரும் Setup நிறுவியை கொண்டு நிறுவ வேண்டும் . நிறுவும் போது மென்பொருள் இயங்க தேவையான கோப்புகள் அனைத்தும் நமது கணிணியில் நிறுவப்பட்டு பின் இயங்கும் . இதை வேறு ஒரு கணிணியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அங்கும் நிறுவவேண்டும் .

ஒரு மென்பொருளின் Portable என்றால் அந்த மென்பொருளை நிறுவ அதாவது Install செய்யாமல் நேரடியாக இயக்குவது ஆகும் . இதன் பயன் என்னவென்றால் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களை CD,Pen Drive போன்றவற்றில் எடுத்து சென்று வேறு எந்த கணிணியிலும் நிறுவ வேண்டிய அவசியம் இல்லாமல் CD,Pen Drive இல் இருந்தே அப்படியே இயக்கி பயன்படுத்தலாம் .

இப்படி பயன்படுத்த நமக்கு நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் Portable வகை வேண்டும் . பிரபல மென்பொருள்களின் portable வடிவம் இந்த இணைய தளத்தில் கிடைக்கிறது .

0 கருத்துரைகள்:

Live TV

Sun Tv Live Streaming KTV Live STreaming Vijay Tv Live Streaming Kalaignar Tv Live Streaming Raj News Live Streaming